வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, December 30, 2019

மாத வீட்டு வாடகையாக ரூ.15 லட்சம் செலவு செய்த இந்திய தூதர்.. அரண்டு போன வெளியுறவுத்துறை.. அதிரடி

ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதர் ரேணு பால், வீட்டு மாத வாடகைக்காக 15 லட்சத்தை எடுத்து நிதி முறைகேடுகள் செய்ததால் அவரை திரும்ப அழைத்துள்ளது. 1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ரேணு பால் ஆஸ்திரியாவில் தூதராக பணியாற்றி வருகிறார். அவரது பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.  இந்நிலையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) உத்தரவின்படி, வெளிவிவகார அமைச்சகத்தினால்...

நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்

கட்சிக்காரர்களின் வீடுகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலங்கள் போடப்படுகிறதா என திமுக மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்துள்ளார். CAA-வுக்கு எதிராக கட்சிக்காரர்கள் வீடுகளில் கோலங்கள் போடப்படுகிறதா? நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி...

தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கழக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ...

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும்.  அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இத்தகைய...

Sunday, December 15, 2019

கச்சத்தீவு அருகே பரபரப்பு!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டனர். இந்த சூழலில் கச்சதீவு பகுதியில்...

மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்!

நாளை கடைசி நாள் தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறுகிறது. இதன்மூலம்...

Wednesday, December 11, 2019

ஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவைக்கான அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தற்பொழுது ஜியோ நிறுவனம் மீண்டும் தனது ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் தனது பயனர்களுக்குச் சேவையை வழங்க இந்த திட்டங்களை மீண்டும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. 1ஜிபி டேட்டா கிடைக்கும் புதிய திட்டம் : ஜியோவின்...

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது. புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 (RISAT - 2BR1) செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள...

பிரதமர் மோடி, சீன அதிபர் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக தமிழக அரசு உயரதிகாரிகள் சீனா செல்லவுள்ளனர்.

மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் தமிழகம் வந்தனர். இதையடுத்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையிலுள்ள செலவீன பிரிவு செயலாளர்  சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 பேர் வரும் 15ந் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில்...

திமுக உட்பட 10க்கு மேற்பட்டோர் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும். உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்....

அளவில் பெரியதாக இருக்கிறது வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்! பொதுமக்கள் வாங்கத் தயக்கம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதேபோல, தஞ்சாவூரிலும் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 200 என விற்றது. வெங்காயப் பற்றாக்குறையாலும், விலை அதிகரிப்பாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. எகிப்தில் இருந்து வந்த வெங்காயம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தது. இதைத்தொடா்ந்து,...

Monday, December 2, 2019

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இருநாட்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து...

உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்...?

வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ. 34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.85 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு...

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்

2019ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்துகொள்வது மிகவும் எளிமையாக பட்டுள்ளது மேலும் இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை என்னை மட்டுமே வைத்து நீங்கள் வாக்களிக்கப் போகும் அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த இடத்தில் வாக்களிப்பீர் கள், நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத்து...

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13 ஆம் தேதி வரை வேட்புமனு பெறப்படும் என தெரிவித்த அவர், 16 ஆம் தேதி வேட்புமனு மீதான மறுபரிசீலனை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த தேதியில்...

Thursday, November 28, 2019

28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் குஷ்பு

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.  இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில்...

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை

 "சிறையில் இது எனக்கு 100வது நாள், அமலாக்கத்துறை இதுவரை என்னிடம் விசாரணை நடத்தியதில்லை, எந்த ஒரு சாட்சியையும் நான் எதிர்கொள்ளவில்லை"- ப.சிதம்பரம் கூறியதாக கபில் சிபல் வெளியிட்ட தகவல் ...

பதவி ஏற்பு விழா ஸ்டாலினுக்கு அழைப்பு

ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்புதெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்புகர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்புமகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு ...

ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ

நெல்லைக்காரனுங்களுக்கு கொழுப்ப பார்த்தியாலே...ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ ...

Jharkhand to vote in five phases from November 30, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.  இதன் முடிவுகள் விவரம்:  பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க...

36 ஆண்டுகள் தனது நடிப்புத் திறமையால் வில்லனாக கோலொச்சியவர்..

சென்னை: தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகள் தனது நடிப்பு திறமையால் கோலொச்சிய நடிகர் பாலா சிங்கின் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் பிறந்தார். பள்ளி நாட்களிலேயே நடிப்பு மீது தீராத காதல் கொண்ட பாலா சிங், நடிப்புக்கான எந்த மேடை கிடைத்தாலும் அதனை அழகாக பயன்படுத்தி வந்துள்ளார். கல்லூரி...

வடகிழக்கு பருவமழை தீவிரமாகிடிச்சி.. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்கு!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் நல்ல மழை என்பதையே தமிழகம் இந்த ஆண்டு பார்க்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலும் வெளிநாடு பக்கம் சென்றுவிட்டது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான புயல் மேற்கு...

போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

பெங்களூர் நகரின் முக்கியமான ஒரு சில இடங்களில் போலீசார் தற்போது பொம்மைகளை நிறுவியுள்ளனர். அவற்றுக்கு போக்குவரத்து போலீசார் போன்று உடை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் நிற்கிறார்கள் என பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது. உண்மையில் இவ்வாறான ஒரு பழக்கம் வாகன ஓட்டிகளிடம் இருக்கவே செய்கிறது. அதாவது போலீசார் நிற்பதை...

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக இன்று பதவியேற்கிறார்

மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும்...

Saturday, November 23, 2019

விடாமல் துரத்துகிறார்…மரியான் நடிகை போலீசில் புகார்..! முகநூல் விபரீதங்கள்

பூ, மரியான் உள்ளிட்ட படங்களின் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பார்வதி மேனன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், விரட்டி விரட்டி தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முகநூல் மூலம் ஆரம்பித்த தொல்லையின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. பூ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில்...

தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன?

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தமிழ் பேசும் சமூகம் ஆதரவளிக்காத நிலையில், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் வாக்குகள் மாத்திரமே கோட்டாபய...