வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, April 18, 2020

ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் -ஐ.நா எச்சரிக்கை

தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் என ஐ.நா ஆப்பிரிக்க பொருளாதார ஆணையம் எச்சரித்து உள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால், மொத்த நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டை மீறி 120 கோடியை எட்டக்கூடும்.



ஆனால் தீவிரமான சமூக தொலைதூர நடவடிக்கைகள் செயல்படுத்தினால் தொற்றுநோய் பாதிப்பின்   எண்ணிக்கை 12.2  கோடியாக  குறையக்கூடும் என  ஐ.நா. ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையம் கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின்  அடுத்த மையமாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவு உயர்ந்து உள்ளது, இப்போது 18,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1,000 இறப்புகள் உள்ளன.

தற்போதைய விகிதம் ஐரோப்பிய நகரங்களுக்கும் நாடுகளுக்கும் மிகக் குறைவு, ஆனால் பாதிப்புகளில் விரைவான ஏற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஆப்பிரிக்க தலைநகரங்களிலிருந்து பரவி வருவதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்

கொரோனா வைரஸ்: ”ஊரடங்கு தேவையில்லை” - அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்
நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா மாகாணங்களில் முடக்க நிலையைத் தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களைப் பாதிக்கின்றன என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவற்றை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது. இதனையடுத்து இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் சுனைனாவின் போஸ்டர்!


‘டிரிப்’ படத்தில் பிரவீன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டென்னிஸ் இயக்கி உள்ளார். சிலர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பயணப்படுகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனாவால் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விற்பனையில் அசத்தும் டாடா நெக்சான் இவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் இவி மாடலை அறிமுகம் செய்தது. விற்பனையை பொருத்தவரை டாடா நிறுவனம் இதுவரை 198 நெக்சான் இவி மாடல்களையும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 116 இசட் எஸ் இவி யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஹூண்டாய் கோனா இவி விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 


நெக்சான இவி மாடலின் துவக்க விலை ரூ. 13.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.


இதுவரை டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பெரும்பான்மை நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க துவங்கி இருக்கின்றனர். 

இந்த விற்பனையும் ஜோர்.. எல்லாத்துக்கும் காரணம் லாக்டவுன்

ஆணுறை மட்டுமில்ல.. இந்த விற்பனையும் ஜோர்.. எல்லாத்துக்கும் காரணம் லாக்டவுன்


பெங்களூரு: ஆணுறைகள்தான் விற்பனைதான் அதிகமாயிடுச்சுன்னு பார்த்தால், கர்ப்ப தடை மாத்திரைகள், கர்ப்ப பரிசோதனை கருவிகள் என இவைகளின் விற்பனைகூட சூடு பிடித்திருக்கிறாராம்.. அதாவது தம்பதிகள் சந்தோஷமாக இந்த 2-ம் கட்ட லாக்டவுனை அனுபவிக்கிறார்கள் என்றே தெரிகிறது.

ஊரடங்கு விதிமீறல்: ரூ.1 கோடி அபராதம் வசூல்

சென்னை: ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, விதிகளை பின்பற்றாமல், அத்யாவசியமின்றி சாலையில் சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மே3 வரை செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு


செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு;
ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள் அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம் வருமானம் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய முடியாவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள்.


இந்த நிலையில், ஊரடங்கு கடந்த 14ந்தேதி நீட்டிக்கப்பட்டது.  வரும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை அவை நீட்டித்துள்ளன.




டிராய் இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் சில வாரங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்களை, தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஏற்பட மே 3 தேதி வரையில் டேட்டா கொடுக்குமாறு அறிவுறுத்தியது. அதேபோல் இந்தச் சலுகைகளால் எத்தனை வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்பது தொடர்பாக முழுவிபரத்தையும் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.