ஐபோன் மலிவு விலையில் அறிமுகமா ஐபோன் என்றவுடன் அனைவரும் அதன் விலை 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் தற்போது ஐபோன் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஐபோன் எஸ்.இ (iPhone SE) மாடல் வகை ரூ.23,999-க்கு இணையத்தில் கிடைக்கும். இதைவிட மலிவு விலையில் புது மாடல் ஐபோன் ஒன்றை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய வாய்ப்பு :
ஆப்பிள் ஒரு மலிவு விலை ஐபோனை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் உண்மையானால் ஐபோன் எஸ்.இயின் அடிப்படை வசதி கொண்ட மாடல் போனாக இருக்க வேண்டும்.பட்ஜெட் ஐபோன் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய வதந்திகள் பலவற்றுடன் ஒத்துப்போகிறது, 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புதிய பட்ஜெட் ஐபோனை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபோன் ரேம் பவர், மெமரி ஸ்டோரேஜ் அதேபோல் புதிய ஏ 13 பயோனிக் சில் மூலம் இது இயக்கப்படும் எனவும் கூறினார். ஐபோன் ரேம் 3 ஜிபி ரேம் , மெமரி 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கக்கூடம் எனவும் கணித்துள்ளார். எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
0 comments:
Post a Comment