வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, November 23, 2019

சினிமாவில் நுழையும் முன் நயன்தாரா வைரலாகும் வீடியோ

15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா, இந்த துறையில் வருவதற்கு முன் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக இருந்துள்ளார். மலையாள சேனல் ஒன்றில் அவர் தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று பல பெண்களின் ஆதர்சமாகவும், அடையாளமாகவும், வர்த்தக நாமமாகவும் உருவெடுத்துள்ள நயன்தாரா முதன்முதலில் என்ன வேலை செய்தார், எப்படி இந்த இடத்தை அடைந்தார், அதற்காக அவர் எப்படி உழைத்தார் என்ற தகவல்களை அந்த தொலைக்காட்சி வெளியிட்டது. நயன்தாரா முதன்முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தொகுப்பாளினியாக தோன்றியிருந்தார். கைராலி நெட்வேர்க்கிற்காக ‘பியூட்டி டாக்டர்’ என்ற நிகழ்ச்சியையே தொகுத்து வழங்கியிருந்தார். 18 நிமிட நிகழ்ச்சியில் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே அவர் தோன்றுகிறார்.ஆனால் இன்று நயன்தாராவின் திரைப்படங்கள் சக்கை போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment