`2021-ல் தமிழக மக்கள் அரசியலில் அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நிகழ்த்துவார்கள்!' - ரஜினி
நடிகர்கள் திரைப்படங்களில் நடிப்பதை ரசிக்கலாம். ஆனால், அவர்கள்.. நானே அரசியல் செய்வேன், நானே வழிநடத்துவேன் எனச் சொல்வது தவறு. நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது” எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ரஜினி குறித்து கே.எஸ்.அழகிரி
நடிகர்கள் ரஜினி, கமல் போன்றோர் மக்களின் சமூகப் பிரச்னைக்காக என்றாவது போராடி இருக்கிறார்களா? அரசின் பிரச்னைகளை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்களா? அவர்கள் சொன்ன கருத்தில் ஆணித்தனமாக நிலை பெற்றிருக்கிறார்களா?. ரஜினி, கமலின் அரை நூற்றாண்டுக்கால சினிமா வாழ்வில் பொதுமக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்?
நடிகர்களின் அரசியல் பிரவேசம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தோடு முடிந்துவிட்டது. அதன்பிறகு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
0 comments:
Post a Comment