ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதர் ரேணு பால், வீட்டு மாத வாடகைக்காக 15 லட்சத்தை எடுத்து நிதி முறைகேடுகள் செய்ததால் அவரை திரும்ப அழைத்துள்ளது. 1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ரேணு பால் ஆஸ்திரியாவில் தூதராக பணியாற்றி வருகிறார். அவரது பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) உத்தரவின்படி, வெளிவிவகார அமைச்சகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இந்திய தூதர் ரேணு பால் "அமைச்சகத்தின் அனுமதியின்றி தான் தங்கிய வீட்டுக்காக கோடி ரூபாய்க்கு பெரும் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. வெளியுறவுத்துறையின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி தலைமையிலான குழு செப்டம்பர் மாதம் வியன்னாவுக்கு சென்று விசாரணை நடத்தியது. அதன் பிறகு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அளித்த பரிந்துரையில் இந்திய தூதர் ரேணு பால் நிதிமுறைகேடுகள் செய்தது. விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தது.
இதையடுத்து பல்வேறு மோசடி புகாரையடுத்து ஆஸ்திரியா இந்தியா தூதர் ரேணுபாலுக்கு தூதர் அந்தஸ்தை ரத்து செய்த இந்திய வெளியுறவுத்துறை அவரை உடனே திரும்ப அழைத்துள்ளது.
0 comments:
Post a Comment