வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Sunday, December 15, 2019

கச்சத்தீவு அருகே பரபரப்பு!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டனர்.


இந்த சூழலில் கச்சதீவு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அச்சத்துடன் இருந்தனர்.

இன்று அதிகாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்துமாறு கூறினர்.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தால் கைது செய்துவிடுவோம் என்று எச்சரித்து விடுத்து விரட்டி அடித்தனர்.

0 comments:

Post a Comment