வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, August 22, 2020

கைலாசா நாட்டிற்க்கு செல்ல பாஸ்போர்ட் வாங்குவது எப்படி?

 


நித்யானந்தா  சில மாதங்களுக்கு முன்பு நான் தனியா ஒரு நாடு வாங்கீருக்கேன், இனிமே நான் இன்னொரு நாட்டுல போய் வாழ மாட்டேன். எனக்குன்னு தனியா ஒரு நாடு வாங்கிருக்கேன். இனிமே இங்க தான் வாழுவேன்னு சொன்னாரு. கொரோனா வைரஸ்  உலகத்த தாக்குரதுக்கு முன்னாடியே அத முன்னாடியே பிரெடிக்ட் பன்னி தப்பிச்சு போயிட்டரு. அது மட்டுமில்லாம பல மானிலத்துல உள்ள போலீஸ் தேடீட்டு இருக்குறதனால எப்புடியோ எஸ்கேப் ஆயி எங்கயோ போயிட்டாரு. 
இப்போ அந்த கைலாசா நாட்டுக்குன்னு ஒரு கொடி, பாஸ்போர்ட், இன்னும் சில சிரப்பம்சங்கள் நிறைய இருக்குனு அவரோட வெப்சைட் ல போட்டிருக்கு. பாஸ்போர்ட் க்கு  அப்லை பன்றதுக்கு ஒரு பேஜ் அந்த வெப்சைட்ல இருக்கு. அப்லை பண்ணா அது வெற்றிகரமாகவும் முடியுது.
நீங்க யாரச்சும் கைலாசா நாட்டுக்கு போகனும்னு கேட்டீங்கன்னா கீழ குடுத்திருக்குற லிங்க் கிலிக் பன்னி பாஸ்போர்ட் அப்லை செஞ்சிகோங்க.

Saturday, April 18, 2020

ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் -ஐ.நா எச்சரிக்கை

தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் என ஐ.நா ஆப்பிரிக்க பொருளாதார ஆணையம் எச்சரித்து உள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால், மொத்த நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டை மீறி 120 கோடியை எட்டக்கூடும்.ஆனால் தீவிரமான சமூக தொலைதூர நடவடிக்கைகள் செயல்படுத்தினால் தொற்றுநோய் பாதிப்பின்   எண்ணிக்கை 12.2  கோடியாக  குறையக்கூடும் என  ஐ.நா. ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையம் கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின்  அடுத்த மையமாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவு உயர்ந்து உள்ளது, இப்போது 18,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1,000 இறப்புகள் உள்ளன.

தற்போதைய விகிதம் ஐரோப்பிய நகரங்களுக்கும் நாடுகளுக்கும் மிகக் குறைவு, ஆனால் பாதிப்புகளில் விரைவான ஏற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஆப்பிரிக்க தலைநகரங்களிலிருந்து பரவி வருவதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்

கொரோனா வைரஸ்: ”ஊரடங்கு தேவையில்லை” - அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்
நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா மாகாணங்களில் முடக்க நிலையைத் தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களைப் பாதிக்கின்றன என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவற்றை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது. இதனையடுத்து இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் சுனைனாவின் போஸ்டர்!


‘டிரிப்’ படத்தில் பிரவீன், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டென்னிஸ் இயக்கி உள்ளார். சிலர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பயணப்படுகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பயங்கரங்களே கதை. இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனாவால் படத்தை வெளியிட முடியவில்லை என்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விற்பனையில் அசத்தும் டாடா நெக்சான் இவி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் இவி மாடலை அறிமுகம் செய்தது. விற்பனையை பொருத்தவரை டாடா நிறுவனம் இதுவரை 198 நெக்சான் இவி மாடல்களையும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 116 இசட் எஸ் இவி யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஹூண்டாய் கோனா இவி விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 


நெக்சான இவி மாடலின் துவக்க விலை ரூ. 13.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.


இதுவரை டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பெரும்பான்மை நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க துவங்கி இருக்கின்றனர். 

இந்த விற்பனையும் ஜோர்.. எல்லாத்துக்கும் காரணம் லாக்டவுன்

ஆணுறை மட்டுமில்ல.. இந்த விற்பனையும் ஜோர்.. எல்லாத்துக்கும் காரணம் லாக்டவுன்


பெங்களூரு: ஆணுறைகள்தான் விற்பனைதான் அதிகமாயிடுச்சுன்னு பார்த்தால், கர்ப்ப தடை மாத்திரைகள், கர்ப்ப பரிசோதனை கருவிகள் என இவைகளின் விற்பனைகூட சூடு பிடித்திருக்கிறாராம்.. அதாவது தம்பதிகள் சந்தோஷமாக இந்த 2-ம் கட்ட லாக்டவுனை அனுபவிக்கிறார்கள் என்றே தெரிகிறது.

ஊரடங்கு விதிமீறல்: ரூ.1 கோடி அபராதம் வசூல்

சென்னை: ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, விதிகளை பின்பற்றாமல், அத்யாவசியமின்றி சாலையில் சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மே3 வரை செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு


செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு;
ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள் அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம் வருமானம் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய முடியாவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள்.


இந்த நிலையில், ஊரடங்கு கடந்த 14ந்தேதி நீட்டிக்கப்பட்டது.  வரும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை அவை நீட்டித்துள்ளன.
டிராய் இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் சில வாரங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்களை, தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஏற்பட மே 3 தேதி வரையில் டேட்டா கொடுக்குமாறு அறிவுறுத்தியது. அதேபோல் இந்தச் சலுகைகளால் எத்தனை வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்பது தொடர்பாக முழுவிபரத்தையும் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

Monday, December 30, 2019

மாத வீட்டு வாடகையாக ரூ.15 லட்சம் செலவு செய்த இந்திய தூதர்.. அரண்டு போன வெளியுறவுத்துறை.. அதிரடி

ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதர் ரேணு பால், வீட்டு மாத வாடகைக்காக 15 லட்சத்தை எடுத்து நிதி முறைகேடுகள் செய்ததால் அவரை திரும்ப அழைத்துள்ளது. 1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ரேணு பால் ஆஸ்திரியாவில் தூதராக பணியாற்றி வருகிறார். அவரது பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. 


இந்நிலையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) உத்தரவின்படி, வெளிவிவகார அமைச்சகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இந்திய தூதர் ரேணு பால் "அமைச்சகத்தின் அனுமதியின்றி தான் தங்கிய வீட்டுக்காக கோடி ரூபாய்க்கு பெரும் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. வெளியுறவுத்துறையின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி தலைமையிலான குழு செப்டம்பர் மாதம் வியன்னாவுக்கு சென்று விசாரணை நடத்தியது. அதன் பிறகு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அளித்த பரிந்துரையில் இந்திய தூதர் ரேணு பால் நிதிமுறைகேடுகள் செய்தது. விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தது. 
இதையடுத்து பல்வேறு மோசடி புகாரையடுத்து ஆஸ்திரியா இந்தியா தூதர் ரேணுபாலுக்கு தூதர் அந்தஸ்தை ரத்து செய்த இந்திய வெளியுறவுத்துறை அவரை உடனே திரும்ப அழைத்துள்ளது.

நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்

கட்சிக்காரர்களின் வீடுகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலங்கள் போடப்படுகிறதா என திமுக மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்துள்ளார்.CAA-வுக்கு எதிராக கட்சிக்காரர்கள் வீடுகளில் கோலங்கள் போடப்படுகிறதா? நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்

திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கோலம் போடப்பட்டும் CAA-விற்கு எதிராக கண்டனங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கழக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். 
அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.பீர் பிராண்ட்டுகள் உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.

பீர் ஃபோபியா உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?


உண்மையான பீர் பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.
சளிக்கு சிறந்தது சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


இதய நோய்


இதய நோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்அளவாக பீரை பருகி வந்தால், எலும்புகள் நன்கு வலிமையடைவதோடு, எலும்புகளில் அடர்த்தியானது பாதுகாக்கப்படும். இதனால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்

எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.

உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

விலை உயர்ந்த பீர்


மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'vieille bon secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.

Sunday, December 15, 2019

கச்சத்தீவு அருகே பரபரப்பு!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டனர்.


இந்த சூழலில் கச்சதீவு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அச்சத்துடன் இருந்தனர்.

இன்று அதிகாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்துமாறு கூறினர்.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தால் கைது செய்துவிடுவோம் என்று எச்சரித்து விடுத்து விரட்டி அடித்தனர்.

மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்!நாளை கடைசி நாள்

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறுகிறது.


இதன்மூலம் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி நாள் நாளை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்துள்ளன. இதனால் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் வரும் 19ஆம் தேதி ஆகும். அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Wednesday, December 11, 2019

ஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவைக்கான அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தற்பொழுது ஜியோ நிறுவனம் மீண்டும் தனது ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் தனது பயனர்களுக்குச் சேவையை வழங்க இந்த திட்டங்களை மீண்டும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.


1ஜிபி டேட்டா கிடைக்கும் புதிய திட்டம் :

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து புதிய திட்டங்களில் குறைந்த டேட்டா சேவையே தினமும் 1.5ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது. அதைவிடக் குறைவான டேட்டா சேவையைத் தேவைப்படும் பயனர்களுக்கு என்று தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும்படி இந்த ரூ.149 திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் : 

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ், ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசம் மற்றும் 300 FUP லிமிட் பொருந்திய மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான நிமிடங்கள் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. FUP லிமிட் முடிந்த பின், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் :

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம், ஜீடோவின் மற்ற திட்டங்களைப் போல் இல்லாமல் சற்று வேறுபாட்டுடன் இருக்கிறது, மற்ற திட்டங்களில் கிடைக்கும் தினசரி டேட்டா பலன் இந்த ரூ.98 திட்டத்தில் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக அதன் வேலிடிட்டி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஒட்டுமொத்தமாக டேட்டா மற்றும் எஸ்.எஸ்.எஸ் வழங்கப்பட்டுள்ளது.


ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன் :

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான IUC டாக் டைம் திட்டங்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த திட்டம் மற்ற திட்டத்தை போல் 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • The Rs 10 plan offers 124 IUC minutes to Non-Jio numbers and 1GB additional data.
  • The Rs 20 plan offers 249 IUC minutes and 2GB data.
  • The Rs 50 plan offers 656 IUC minutes and 5GB data
  • The Rs 100 plan offers 1,362 IUC minutes and 10GB data.