வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Wednesday, December 11, 2019

ஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவைக்கான அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தற்பொழுது ஜியோ நிறுவனம் மீண்டும் தனது ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் தனது பயனர்களுக்குச் சேவையை வழங்க இந்த திட்டங்களை மீண்டும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.


1ஜிபி டேட்டா கிடைக்கும் புதிய திட்டம் :

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து புதிய திட்டங்களில் குறைந்த டேட்டா சேவையே தினமும் 1.5ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது. அதைவிடக் குறைவான டேட்டா சேவையைத் தேவைப்படும் பயனர்களுக்கு என்று தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும்படி இந்த ரூ.149 திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் : 

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ், ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசம் மற்றும் 300 FUP லிமிட் பொருந்திய மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான நிமிடங்கள் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. FUP லிமிட் முடிந்த பின், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் :

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம், ஜீடோவின் மற்ற திட்டங்களைப் போல் இல்லாமல் சற்று வேறுபாட்டுடன் இருக்கிறது, மற்ற திட்டங்களில் கிடைக்கும் தினசரி டேட்டா பலன் இந்த ரூ.98 திட்டத்தில் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக அதன் வேலிடிட்டி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஒட்டுமொத்தமாக டேட்டா மற்றும் எஸ்.எஸ்.எஸ் வழங்கப்பட்டுள்ளது.


ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன் :

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான IUC டாக் டைம் திட்டங்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த திட்டம் மற்ற திட்டத்தை போல் 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • The Rs 10 plan offers 124 IUC minutes to Non-Jio numbers and 1GB additional data.
  • The Rs 20 plan offers 249 IUC minutes and 2GB data.
  • The Rs 50 plan offers 656 IUC minutes and 5GB data
  • The Rs 100 plan offers 1,362 IUC minutes and 10GB data.

0 comments:

Post a Comment