வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, December 2, 2019

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இருநாட்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்று மற்றும் மேகக்கூட்டங்கள் குவிந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மயிலாடுதுறையில் 14 சென்டி மீட்டரும், புதுக்கோட்டை, குடவாசல் ஆகிய பகுதிகளில் 13 சென்டி மீட்டரும், அணைக்காரன்சத்திரம் காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

0 comments:

Post a Comment