வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, December 2, 2019

உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்...?


வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ. 34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.85 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை விபரங்கள்:

பொதுப்பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

வேட்பாளர்கள் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6-ல் ஒருபங்கு வாக்குகளை பெற்றிருந்தால், அவர்களின் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். உதாரணமாக ஒரு ஊராட்சி வார்டில் 60 வாக்குகள் பதிவானது என்று எடுத்துக்கொண்டால், 10 மற்றும் அதற்கு மேல் வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெற தகுதியானவர்கள் ஆவர்.

0 comments:

Post a Comment