நாளை கடைசி நாள்
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறுகிறது.
இதன்மூலம் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி நாள் நாளை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்துள்ளன. இதனால் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் வரும் 19ஆம் தேதி ஆகும். அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
0 comments:
Post a Comment