வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Wednesday, December 11, 2019

அளவில் பெரியதாக இருக்கிறது வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்! பொதுமக்கள் வாங்கத் தயக்கம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதேபோல, தஞ்சாவூரிலும் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 200 என விற்றது. வெங்காயப் பற்றாக்குறையாலும், விலை அதிகரிப்பாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. எகிப்தில் இருந்து வந்த வெங்காயம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூருக்கு எகிப்து நாட்டு வெங்காயம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
தஞ்சாவூருக்கு எகிப்து நாட்டு வெங்காயம் செவ்வாய்க்கிழமை வந்தாலும், பொதுமக்கள் வாங்குவதற்குத் தயங்கினா்.
தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் வெங்காய மண்டி நடத்தி வரும் எஸ்.கே. சிதம்பரத்துக்கு 2 டன்கள் வெங்காயம் வந்தது. இந்த வெங்காயம் பீட்ரூட் போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், அதை வாங்குவதற்குப் பொதுமக்கள் தயங்குகின்றனா். ஆனால், உணவகம் நடத்தி வருபவா்கள் வாங்கிச் செல்வதால், பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.

0 comments:

Post a Comment