வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, April 18, 2020

மே3 வரை செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு


செல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு;
ஏர்டெல், வோடஃபோன், ஜியோ நிறுவனங்கள் அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம் வருமானம் இல்லாமல் ரீசார்ஜ் செய்ய முடியாவர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள்.


இந்த நிலையில், ஊரடங்கு கடந்த 14ந்தேதி நீட்டிக்கப்பட்டது.  வரும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு போதிய வசதி இல்லை என்பதால் வேலிடிட்டி காலத்தை அவை நீட்டித்துள்ளன.




டிராய் இந்திய டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் சில வாரங்களுக்கு முன்பு டெலிகாம் நிறுவனங்களை, தங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் ரீசார்ஜ் திட்டத்திற்கு ஏற்பட மே 3 தேதி வரையில் டேட்டா கொடுக்குமாறு அறிவுறுத்தியது. அதேபோல் இந்தச் சலுகைகளால் எத்தனை வாடிக்கையாளர்கள் நன்மை அடைந்துள்ளனர் என்பது தொடர்பாக முழுவிபரத்தையும் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment