வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, November 23, 2019

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக பாஜக தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைத்துள்ளனர்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில், பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்லை சந்தித்தது. இதில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து அபார வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டியில், இரண்டு கட்சியாளும் ஆட்சியமைக்க முடியவில்லை.

இதனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வந்தது. இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.


இதனால் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியானதாகவே கருதப்பட்டது. ஆனால் திடீரென இன்று காலை பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது.

பாஜகவின் அம்மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். ஒரே இரவில் இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது என அரசியல் ஆர்வலர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

அதேசமயம் பாஜகவை ஓரங்கட்ட நினைத்த காங்கிரசும் சிவசேனாவும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள் விவரம்:
(மொத்தம் 288 தொகுதிகள்) 
  • பாஜக-105 
  • சிவசேனா- 56 
  • என்சிபி- 54 
  • காங்கிரஸ்- 44 
  • மஜ்லிஸ் கட்சி- 2 
  • பகுஜன் விகாஸ் ஆஹாதி- 3 
  • மார்க்சிஸ்ட் கட்சி- 1 
  • ஜன் சூர்ய சக்தி-1 
  • கிரந்திகரி சேத்கரி கட்சி-1 
  • மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா-1 
  • விவசாயிகள் கட்சி-1 
  • ராஷ்டிரிய சமாஜ் பக்‌ஷா-1 
  • சமாஜ்வாதி கட்சி-2 
  • ஸ்வபிமானி பக்‌ஷா-1 
  • சுயேட்சைகள்-13
  • மொத்தம் - 288


0 comments:

Post a Comment