வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, November 28, 2019

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக இன்று பதவியேற்கிறார்

மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.



மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

முன்னதாக டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சிவசேனாவின் சார்பில் ஏற்கனவே மனகோர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். சிவசேனாவின் 3-வது முதல்வர் உத்தவ் தாக்கரே. பிரதமர் மோடி வாழ்த்து இதனிடையே முதல்வராக பொறுப்பேற்கும் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பதவி ஏற்புவிழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார்.


0 comments:

Post a Comment