வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, November 28, 2019

போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

பெங்களூர் நகரின் முக்கியமான ஒரு சில இடங்களில் போலீசார் தற்போது பொம்மைகளை நிறுவியுள்ளனர். அவற்றுக்கு போக்குவரத்து போலீசார் போன்று உடை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் நிற்கிறார்கள் என பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.


உண்மையில் இவ்வாறான ஒரு பழக்கம் வாகன ஓட்டிகளிடம் இருக்கவே செய்கிறது. அதாவது போலீசார் நிற்பதை பார்த்த பிறகுதான் பலர் அவசர அவசரமாக ஹெல்மெட்டை அணிவார்கள். அதேபோல் பலர் சீட் பெல்ட்டை அணிவதும் கூட போலீசாரை பார்த்த பிறகுதான். செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் கூட போலீசாரை பார்த்தால், உடனடியாக செல்போனை வைத்து விடுவார்கள்.

எனவேதான் இவ்வாறான ஒரு அதிரடி யோசனை பெங்களூர் போலீசாருக்கு உதித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அரை டஜன் ஜங்ஷன்களில் இந்த பொம்மைகளை போலீசார் நிறுவியுள்ளனர். இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், மேலும் 174 பொம்மைகளை முக்கியமான இடங்களில் நிறுவ பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு காவல் துறைக்குள்ளேயே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

எனவே இது தேவையில்லாத செலவு என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. பெங்களூர் போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பயன் அளிக்குமா? அல்லது இது தேவையற்ற திட்டமா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்

0 comments:

Post a Comment