No : 1
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2
உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3 ( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 6 ( ஹோட்டலில் )
" ஒரு காபி எவ்ளோ..? "
" அஞ்சு ரூபா.. "
" எதிர் கடையில 50 பைசான்னு
போட்டு இருக்கே..?!! "
" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "
* * * * * * * * * * * * * * * * * *
No : 7
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * *
No : 8 ( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
0 comments:
Post a Comment