தலைப்பை பார்த்தும் பயந்துவிடாதீர்கள். மங்காத்தாவில் பின்லேடன் என்றதும் அல்-குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தான் படத்தில் நடிக்கிறார் என்று. மங்காத்தா படத்தில் ஒரு பாடலில் வாடா… பின்லேடா… என்ற வார்த்தையை போட்டு ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றனர் மங்காத்தா டீம்.
தயாநிதி அழகிரி தயாரிப்பில், அஜீத்-த்ரிஷா நடிப்பில், டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் மங்காத்தா. அஜீத்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்ட டைரக்டர் வெங்கட் பிரபு, பாடல் காட்சிகளை சூட்டிங் செய்து வருகிறார். இப்படத்தில் பாடல் ஒன்றில் வா..டா. பின்லேடா… என்பது போன்று ஒரு பாடலை கம்போசிங் செய்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
இப்பாடலை பின்னணி பாடகர்கள் கிரிஷ் மற்றும் சுஜித்திரா ஆகியோர் பாட, அதற்கு அஜீத்தும்-த்ரிஷாவும் சேர்ந்து ரொமான்ஸ் செய்வது போன்று காட்சியை உருவாக்கியுள்ளார் வெங்கட்பிரபு. நிச்சயமாக படத்தின் ஹைலைட்டாக இந்தபாடல் இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் படத்தின் பெரும்பகுதியை வெங்கட்பிரபு முடித்துவிட்டதால், மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளன்று படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
0 comments:
Post a Comment