வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, March 21, 2011

ஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி!

ஒரு கல் ஒரு கண்ணாடி (அதாவது ஓகே ஓகே) படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. 


பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் 'ஸ்டார் இயக்குநர்' அந்தஸ்தை எட்டிப் பிடித்துவிட்ட ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயனாக அறிமுகாகிறார் உதயநிதி ஸ்டாலின் என்பதும் அவருக்கு இணையான வேடத்தில் சந்தானம் நடிப்பதும் பழைய செய்தி.

இதுவரை இந்தப் படத்துக்காக தன்னை பிரமாதமாகத் தயார்ப்படுத்தி வந்த உதயநிதி, கடந்த வாரம் படப்பிடிப்பில் இறங்கிவிட்டார் என்பதும், எடுத்த எடுப்பிலேயே ஹீரோயின் ஹன்சிகா மோத்வானியுடன் காதல் காட்சிகளில் கலக்கிவிட்டார் என்பதும் புதிய செய்தி.

இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. மாதவப் பெருமாள் கோயிலில் நடந்த முதல் காட்சியில் நடித்தது உதயநிதியும் சந்தானமும். அடுத்தது, ஹன்ஸிகாவடனான காதல் காட்சிகள்.

எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் ராஜேஷ் மற்றும் ஹீரோயின் ஹன்ஸிகாவை அசத்திவிட்டாராம் உதயநிதி, தனது இயல்பான நடிப்பால்.

"அவர் நடித்ததைப் பார்த்தால் யாரும் முதல்பட ஹீரோ என்று நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காமெடியில் சந்தானத்தையே மிரள வைக்கிறார் மனிதர்", என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் உதயநிதியை.

ஹீரோவாச்சே!!

0 comments:

Post a Comment