கறுப்பு எம்ஜிஆர், சிவப்பு எம்ஜிஆர், ப்ரவுன் எம்ஜிஆர் என்றெல்லாம் இஷ்டத்துக்கும் பட்டப்பெயர்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்த 'பகுதி நேர' அரசியல்வாதிகள், இப்போது நடிகர் விஜய்க்கு ஒரு பட்டம் தந்துள்ளனர்... அது 'இளைய எம்ஜிஆர்'.
கடந்த திங்கள்கிழமை கமலா திரையரங்கில் நடந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில், விஜய்க்கு இந்தப் பட்டத்தை சூட்டிமகிழ்ந்ததோடு, எம்ஜிஆர் மாதிரி அரசியல், சினிமா இரண்டிலும் பெரும் வெற்றி பெருவார் விஜய் என்றும் கூறினர்.
இதைத் தொடர்ந்து நகரின் பல இடங்களிலும் இளைய எம்ஜிஆர் என விஜய்யை சித்தரித்து போஸ்டர்கள் முளைத்துள்ளன.
இதில் விஜய் ரசிகர்கள் ஏக குஷியடைந்தாலும், எம்ஜிஆரின் ரசிகர்களும் 'பக்தர்களும்' மிகுந்த கடுப்பில் உள்ளனர்.
"தமிழக அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி ஒரே ஒரு எம்ஜிஆர்தான். கருப்பு எம்ஜிஆர், இளைய எம்ஜிஆர் என கண்டவர்களுக்கும் பட்டங்கள் கொடுத்து எம்ஜிஆரைக் கேவலப்படுத்த வேண்டாம். மறைந்தும் மறையாத அந்த தலைவருக்கு அருகில் கூட வரமுடியாதவர்கள் இவர்கள். விஜய்யோ இதை மறுக்கக் கூட இல்லை. அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்...", என்றார் எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளுள் ஒருவரான கனிமுத்து.
அதிமுக கூட்டணிக்கு விஜய் ஆதரவளிப்பார் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு தரப்பட்டுள்ள இந்த புதிய பெயர் எம்ஜிஆர் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment