வானம் பட பிரஸ் மீட்டில் ஒரே அனுஷ்கா புராணம். அதிலும் சிம்பு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார் அனுஷ்காவை.
சிலம்பரசன்-அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள புதிய படம், வானம். இந்த படத்தில் பரத், பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால், வேகா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.
தெலுங்கில் வெற்றிபெற்ற ‘வேதம்’ என்ற படத்தை தமிழில் வானம் ஆக்கியுள்ளனர். ஒரிஜினல் படத்தில் அல்லு அரவிந்த்-அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார்கள். அந்த படத்தை இயக்கிய கிரிஷ்தான் வானம் படத்தையும் இயக்கியுள்ளார்.
வானம் படத்தின் பாடல்கள் வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சிம்பு, அனுஷ்காவுக்கு ஏகத்துக்கும் ஐஸ் வைத்தார்.
“இந்த படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். வேதம் பார்த்தபோதே, இந்தப் படத்தில் தமிழில் செய்யணும், அதில் கதாநாயகியாக அனுஷ்காவையே போட வேண்டும் என்று. அந்த அளவு அசத்தலாக பண்ணியிருந்தார் அனுஷ்கா.
அவருடைய நடிப்பு, நடனம் எல்லாமே பிரமாதம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
இயக்குநரை சிபாரிசு செய்தது கூட அனுஷ்காதான். மிகத் திறமையான இயக்குநர்.
யுவன் சங்கர் ராஜாவுடன்…
நான், காதல் அழிவதில்லை படம் நடிப்பதற்கு முன்பு இருந்தே யுவன்சங்கர்ராஜாவை எனக்கு தெரியும். இரண்டு பேரும் இணைந்து பணிபுரிந்த படங்களில் பாடல்கள், ‘ஹிட்’ ஆகிவருகின்றன. எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது வெறும் நட்பு மட்டுமல்ல. இரண்டு பேரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டிருக்கிறோம்,” என்றார்.
0 comments:
Post a Comment