புன்னகை இளவரசி சினேகா அதிரடியாக நடித்துள்ள பவானி திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளைக் கலக்க வருகிறது.
புடவையிலும், சுடிதார் உள்ளிட்ட உடைகளிலும் மட்டுமே பார்த்தறியப்பட்ட சினேகா, புன்னகை இளவரசியாக காதல் படங்களிலும், குடும்பச் சித்திரங்களிலும் வந்து போன சினேகா முதல் முறையாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
காற்றில் கால்களை வீசி விஷ்க் விஷ்க் என சண்டை போட்டு, அதிரடியான போலீஸ் அதிகாரி வேடத்தில் முதல் முறையாக நடித்துள்ளார் சினேகா. அதுதான் பவானி.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீமேக்தான் இது. ஆனால் முற்றிலும் வித்தியாசமான முறையில், சினேகாவை இப்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கிச்சா.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் மார்ச் 4 ம் தேதி திரைக்கு வருகிறதாம். 2 மாதங்களுக்கு முன்பே இப்படம் வந்திருக்க வேண்டும். ஆனால் காரணம் சொல்லாமல் தள்ளிப் போட்டு வந்தனர். இந்த நிலையில் இப்போது தேதி குறித்து விட்டனர்.
ரிவால்வர் ரீட்டா டைப் படங்களைப் பார்த்து தமிழ் ரசிகர்களுக்கு நாளாகி விட்டது. அந்தக் குறையை பவானி மூலம் சினேகா தீர்ப்பாரா என்பதை படத்தைப் பார்த்து விட்டு முடிவு செய்வோம்.

0 comments:
Post a Comment