வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, March 18, 2011

காஜல் அகர்வால் வேணாம்... சோனம்தான் வேணும்: அடம்பிடிக்கும் சிம்பு!

சல்மான் கானின் தபாங் இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனக்கு ஜோடியாக சோனம் கபூர்தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாத உள்ளாராம்சிம்பு  .

இந்தப் படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்ட நடிகை காஜல் அகர்வாலை வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

தபாங் தமிழ் ரீமேக்கை தரணி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஆரம்ப வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. படத்தின் நாயகியாக வட இந்திய நடிகையைத்தான் போட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்தவர்கள் முதலில் அணுகியதுப காஜல் அகர்வாலை.

அவரும் ஓகே சொல்லி தேதிகளும் கொடுத்த நிலையில், திடீரென காஜல் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சிம்பு. இந்தி நடிகர்  அனில் கபூரின் மகளும் இப்போது முன்னணியில் உள்ளவருமான சோனம் கபூரை ஒப்பந்தம் செய்யுமாறு அவர் கூறிவிட, இப்போது பெரும் சம்பளத்தில் சோனம் கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment