கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?
கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)
கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?
கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.
கவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.
கலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி.
கவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது
4 காசு பாப்பாங்க.
கலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா?
கவுண்டமணி (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...
கலைஞர் - ஐயம் என தமிழிலேயே கேள்
கவுண்டமணி - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.
கலைஞர் - அது ... அது வந்து... ஒரு வனிதை , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர்என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?
கவுண்டமணி - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?
கலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.
கவுண்டமணி - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.
கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின் நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.
கலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.
கவுண்டமணி - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னது?டே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்க?ஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியா?ஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாரா?இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா
0 comments:
Post a Comment