வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Sunday, March 27, 2011

கற்பா... அது முடிந்து போன சமாச்சாரம்! - குஷ்பு

Kushbooகற்பு பத்தி பேசாதீங்க... அது முடிஞ்சு போன சமாச்சாரம், என்றார் திமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறியுள்ள நடிகை குஷ்பு.


தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து எக்குத் தப்பாகக் கூறி சர்ச்சையில் சிக்கி ஏகப்ட்ட நீதிமன்றங்களில் ஏறி இறங்கியவர் குஷ்பு. 

இந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பறக்கும் முத்தங்களைக்" கொடுத்து நேற்று தொடங்கினார்.

அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த குஷ்புவிடம், கற்பு குறித்த அவரது பேச்சு இந்த பிரச்சாரத்தில் சிக்கலை ஏற்படுத்தாதா என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த குஷ்பு, "கற்பு விவகாரம் முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பு சொல்லியாச்சு, ஏன் அதை திரும்ப திரும்ப கிளறுகிறீர்கள், என்றார்.

கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் கொண்டுள்ளனர். அந்தக் கோபம் உங்கள் பிரசாரத்தில் பிரதிபலித்தால், என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.

உடனே ஏகத்துக்கும் டென்ஷனான குஷ்பு, "யார் நீங்க, அதிமுக ரிப்போர்ட்டரா?" என்றார் கோபத்துடன். 

உங்களுக்கு பிடிச்சமாதிரியே கேள்வி கேட்க நாங்க ஒண்ணும் திமுக தொண்டர் இல்லை என்று பதிலுக்கு அந்த நிருபரும் குரல் உயர்த்த, அமைதியாக திரும்பி நடந்தார் குஷ்பு.

0 comments:

Post a Comment