ரஜினி ஆண்டு தோறும் சில வாரங்கள் ஒய்வுக்காக இமயமலை செல்வது வழக்கம்.
புதுப்பட வேலைகள் துவங்கும் முன்பு அவர் இந்த பயணத்தை மேற்கொள்வார். அவர் நடிக்க உள்ள ராணாபடத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது பெரும்பகுதி காட்சிகள் வெளிநாட்டிலேயே பட மாக்கப்படுகிறது.
எனவே அதற்கு முன்னதாக இமய மலை சென்று வரும் முடிவில் இருக்கிறார். பயணத்திட்டங்கள் தயராகி வருகின்றன. இமயமலையில் யாத்ரீ கர்கள் நடந்து செல்லும் பாதையில் ரஜினி புதிதாக ஆசிரமம் ஒன்றை கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் கட்டுமான பணிகளை பயணத்தின் போது நேரில் பார்வையிடவும் முடிவு செய்துள்ளாராம். துறவிகளை சந்தித்து ஆசியும் பெறுகிறார். அதன் பிறகு சென்னை திரும்புகிறார்.
சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டு போட அவர் சென்னையில் இருப்பாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் அவர் ஓட்டளிப்பது வழக்கம். படப்பிடிப்புக்கு வெளிநாடு செல்ல வேண்டி இருப்ப தால் ஓட்டு போடும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவாரா? என்பது தெரியவில்லை
0 comments:
Post a Comment