தமிழில் வானம் படத்தில் இடம்பெற்றுள்ள “எவன்டி உன்ன பெத்தான்…” என்ற பாடல் இந்தியில் ஆல்பமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆல்பத்தை ஒரு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக எடுக்க இருக்கின்றனர்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான “வேதம்” படம் தமிழில், “வானம்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்பு ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். படத்தில் சிம்பு தானே, ஒரு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். “எவன்டி உன்ன பெத்தான்… பெத்தான்… கையில கிடைச்சா செத்தான்… செத்தான்…” என்று ஆரம்பிக்கும் இப்பாடல் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீசானது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கும் இப்படால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர்தான் இப்பாடலுக்கு மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பாடல் பெண்களை இழிவு படுத்துவதாகவும், ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இருப்பதாகவும், தொடர்ந்து சிம்பு இதுபோன்று பெண்களை இழிவுபடுத்துவதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதனிடையே இப்பாடலை கேட்ட பாலிவுட் நிறுவனம் ஒன்று, இந்தியில் ஆல்பமாக தயாரிக்க சிம்புவிடம் கேட்டுள்ளது. பாலிவுட் என்றதும், ஓ.கே. சொல்லிய சிம்பு, இப்பாடலுக்கான வேலையில் இறங்கியுள்ளார். மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட இருக்கும் இந்த ஆல்பத்தில் சிம்புவே பாடலை எழுதி, பாடி, ஆடவும் இருக்கிறார். இவருடன் லண்டனை சேர்ந்த 30 நடன கலைஞர்களும் ஆட இருக்கின்றனர். ரூபாய் 1கோடி செலவில் எடுக்கப்படும் இந்த ஆல்பத்தை, பிரபல நடன இயக்குநர் அகமது கான் டைரக்ட் செய்கிறார்
0 comments:
Post a Comment