வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Sunday, March 20, 2011

புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!

அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.

போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.

இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவைக்கவில்லை. ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலி வாய்க்குள் கைவிட்டு இறைச்சியை ஊட்டி அசரடித்தாராம்.

இந்தியில் தயாராகும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் அசின், இதன் படப்பிடிப்பு  க்காக சமீபத்தில் தாய்லாந்து போயிருந்தார். அப்போது அங்குள்ள டைகர் டெம்பிள் பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார் படப்பிடிப்புக் குழுவுடன். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள புலிகளைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் சென்றாராம் அசின்.

தைரியமாக அருகில் போய் ஒரு புலிக் குட்டிக்கு உணவு ஊட்டினாராம். இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பதறினார்கள். புலி வாய்க்குள் கை வைத்து உணவு ஊட்டியது பயமில்லையா? என்று அவரிடம் கேட்டபோது, "மனதில் தைரியம் இருந்தால் எந்த பயமும் நம்மை பயமுறுத்தாது. தைரியம் இல்லாவிட்டால் எதையும் செய்ய முடியாதுட என்றார்.

இதையடுத்து அவருக்கு ஜங்கிள் கி ராணி (காட்டு ராணி) என்று செல்லமாக பட்டம் சூட்டினார்களாம் படக்குழுவினர்!

0 comments:

Post a Comment