வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, February 24, 2011

நமீதாவை வைத்து எந்திரனை ரீமேக்கும் சக்தி சிதம்பரம்!


இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் தயாராகி, அதிக வசூலைக் குவித்த பெருமைக்குரிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன்.
இந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்கிறாராம் சக்தி சிதம்பரம். ரீமேக் என்றால்? உட்டாலக்கடி வேலைதான்!
எந்திரனை தமாஷாக எடுக்கப் போகிறாராம். இதில் விஞ்ஞானி மற்றும் ரோபோ வேடத்தில் நடிக்கப் போகிறவர் வேறு யாருமில்லை… சக்தி சிதம்பரமேதானாம்.
ஐஸ்வர்யா ராய் நடித்த சனா வேடத்தை, சக்தி சிதம்பரத்தின் வழக்கமான நாயகி நமீதா ஏற்றுள்ளாராம்.
படம் குறித்த டிஸ்கஷன் ரொம்ப தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் நிச்சயம் ரஜினி சார் படத்தை கிண்டலடிக்கிற மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக மட்டுமே எடுக்கத் திட்டமிட்டுள்ளோம், என்கிறார்கள் சக்தி சிதம்பரம் யூனிட்காரர்கள்!
சரி.. படத்துக்கு தலைப்பு?
பைந்திரன்!!

1 comment:

  1. நல்ல விசயம் தானே... வாழ்த்துக்கள்

    ReplyDelete