வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, February 3, 2011

நடிக்க மறுத்த கதாநாயகிகள் பட்டியல்:காமெடி புலம்பல்


காமெடி நடிகர் கருணாஸ்,   `திண்டுக்கல் சாரதி' படத்திலும் எனக்கு ஜோடியாக நடிக்க பல கதாநாயகிகள் மறுத்து விட்டார்கள். இறுதியாக, கார்த்திகா சம்மதித்தார்.
 இப்போது, `அம்பாசமுத்திரம் அம்பானி' படத்திலும் அதே நிலை. வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிற கதாநாயகிகளை எல்லாம் கேட்டுப்பார்த்தோம். நடிக்க மறுத்து விட்டார்கள்'' என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
அவர் மேலும்,  `அழகி' படத்தின் மூலம் பிரபலமான மோனிகாவை நடிக்க வைக்கலாம் என்று நான்தான் சொன்னேன். அவர், `சிலந்தி' என்ற படத்தில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி இருக்கிறார். அதனால் வேண்டாம் என்றார்கள் தயாரிப்பாளரும், டைரக்டரும். பரவாயில்லை, அவரை கேட்கலாம் என்று நான் கூறினேன்.
மோனிகாவை தொடர்புகொண்டபோதும், ``கருணாஸ் ஜோடியாக நடிக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார். இதேபோல், `முனியாண்டி விலாஸ்' பூர்ணா, `எல்லாம் அவன் செயல்' பாமா, `ராமன் தேடிய சீதை' ரம்யா நம்பீசன் ஆகியோரும் நடிக்க மறுத்து விட்டார்கள்.
கடைசியாக, `கற்றது தமிழ்' படத்தில் கதாநாயகியாக நடித்த அஞ்சலியிடம் கேட்டோம். அவரும் நடிக்க மறுத்து விட்டார்.
`கற்றது தமிழ்' படத்தை வாங்கி வினியோகம் செய்தது நான்தான். அதனால் இரண்டே கால் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. நான் அந்த படத்தை வாங்கியிருக்காவிட்டால், அஞ்சலி கதாநாயகியாகவே அறிமுகமாகி இருக்க முடியாது. அதற்கு காட்டுகிற நன்றிதான் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தது.
நான், எந்த நடிகையிடமும் மடியில் படுத்து கொஞ்ச வேண்டும் என்று ஆசைப்படுகிறவன் அல்ல. சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. ஒரு நடிகை கூட என்னை விரல் நீட்டி தப்பாக பேச முடியாது. அப்படி ஒழுக்கமாக இருக்கிறவனுக்கு கதாநாயகிகள் செய்கிற மரியாதை இதுதான் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
அதன்பிறகுதான் மும்பை நடிகையான நவ்னீத் கவுரை ஒப்பந்தம் செய்தோம்''என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment