வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, February 1, 2011

கடி


 



குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம்? குன்னக்குடி-வயலினிஸ்ட்! காந்திஜி-non வயலினிஸ்ட்!!


தேள் திரவப்பொருளா? திடப்பொருளா? தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி? கொட்டுமே!

மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!


கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!


என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!


என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!


எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.


உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்? அது 'ஈஸி' சேராச்சே!


உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? படுத்த படுக்கையாக...

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது தான்...!

இந்த ரோடு எங்கே போகிறது? எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.


எதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே? எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் 
சொன்னாருப்பா....


 என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

2 comments:

  1. வீட்டுக்கு கெளம்புற நேரத்துல சோதனையா

    ReplyDelete
  2. //என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!//

    அருமையான நகைச்சுவை நண்பா

    புலம்பெயர் உறவுகளே ஏன் இப்படி?

    ReplyDelete