வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, February 15, 2011

உலகக் கோப்பைப் போட்டியால் தள்ளிப் போன 7 படங்கள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் 7 தமிழ்ப் படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளன.
புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன.

குறிப்பாக, காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி வானம், ஊலலல்லா, கோ மற்றும் எங்கேயும் காதல் வெளியாகவிருந்தன.
ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன.
மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ஆர் கே.யின் புலி வேஷம் படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சதா, கார்த்திக் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
எங்கேயும் காதல் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்துள்ளனர். முழு நீள காதல் படமாக தாயராகியுள்ளது.
இதுபற்றி பிரபுதேவா கூறும் போது எங்கேயும் காதல், காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய அழகான காதல் கதை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமான காதல் பாடல்களை பாரீஸ் விதிகளில் படமாக்கினோம்.
தயாரிப்பாளர் தரப்பில் உலக கோப்பை கிரிக்கெட் இருப்பதால் ரிலீசை தள்ளி வைப்பது நல்லது என்று கருதினர். எனவே ஏப்ரல் மாதத்துக்கு இப்படம் தள்ளிப் போகிறது என்றார்.

0 comments:

Post a Comment