தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதுடன், இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டிக்காத மாநில, மத்திய அரசுகளை கண்டித்தும் பேசினார்.
முதலில் அவர் பேச ஆரம்பித்தபோது மழை பெய்யத் தொடங்கியதாலும், ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக ஆரவாரம் செய்ததாலும் பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஹோட்டலுக்கு சென்று விட்டார் விஜய். பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் மேடைக்கு வந்த விஜய், ரசிகர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.
முன்னதாக விஜய் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விஜய் ரசிகர்கள், காலையில் இருந்து வாகனங்களில் நாகை வரத் தொடங்கினர்.
இதில் அனைவருமே 15 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர். பஸ்கள், வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோவில் வந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டு சாலைகளில் ஆர்ப்பரித்து, பொதுமக்களை கலங்கடித்து சென்றனர்.
விஜய் ரசிகர்களின் ஆர்வ மிகுதிக்கு ரோட்டில் நடந்து சென்ற பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவியர்களும் தப்பவில்லை.
ரசிகர்களின் கூச்சலால் பெண்களும், மாணவியர்களும் அலறியடித்து ஓடினர். இச்செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
0 comments:
Post a Comment