தினா படத்தில் ஆரம்பித்த தல புராணம், அடுத்தடுத்த அஜித் படங்களில் எதிரொலித்தது. அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற
தலபோல வருமா… பாடல் அந்த படத்துக்கு பிறகு வெளியான அத்தனை அஜித் படங்களிலும் இடம்பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இன்னும் சொல்லப் போனால் இந்த பாடலுக்கு பிறகு அஜித்தை அவரது ரசிகர்கள் தல என்று அன்போடு அழைக்கத் தொடங்கினார்கள். இதேபோல… அதே படத்தில் இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன… என்ற பாடலும் ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறது.
தல நடிக்கும் மங்காத்தா திரைக்கு எப்போது வரும்? என காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. அஜித், த்ரிஷா, அர்ஜுன், லட்சுமிராய், அஞ்சலி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தில் அஜித்தின் சுயவிளம்பர பாடல் எதுவும் இருக்காது என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி.
அதேநேரம் அஜித்தின் கோரிக்கையை ஏற்று படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு, படத்தின் பின் பாதியின் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை ஏற்றி, அஜித்திடம் பாராட்டை பெற்றிருக்கும் செய்தியும் வெளியாகியிருக்கிறது.
அடுத்தடுத்த தோல்வி தந்த பாடத்தால் நடிகர் விஜய், தனது காவலன் படத்தில் எந்தவித பஞ்ச் டயலாக், ஆக்ஷன், அறிமுக பில்ட்-அப் பாடல் இல்லாமல் நடித்திருந்தது காவலன் வெற்றிக்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment