வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, December 11, 2019

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 (RISAT - 2BR1) செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
628 கிலோ எடைகொண்ட ரிசாட் 2பிஆர்1 செயற்கைக்கோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும் என்பதால் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். அதன் வாயிலாக கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.
2009ம் ஆண்டில் ரிசாட்-2, 2012ல் ரிசாட்-1, கடந்த மே மாதம் ரிசாட் 2பி ஆகியவை அனுப்பப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
ரிசாட் 2 பிஆர்1 செயற்கைக்கோளுடன் வணிக ரீதியில் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள்கள் என 10 செயற்கை கோள்கள் செலுத்தப்பட உள்ளன.
ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இது பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டின் 50வது திட்டம் என்று தெரிவித்தார்.
இது விண்ணில் இருந்து பூமியை ஆய்வு செய்ய இஸ்ரேல் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். கல்வி சார்ந்த செயற்கைக்கோளான இதில் கேமரா, ரேடியோ டிராஸ்பாண்டர் உள்ளிட்டவை இருக்கின்றன.

பிரதமர் மோடி, சீன அதிபர் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக தமிழக அரசு உயரதிகாரிகள் சீனா செல்லவுள்ளனர்.

மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் தமிழகம் வந்தனர். இதையடுத்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையிலுள்ள செலவீன பிரிவு செயலாளர்  சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 பேர் வரும் 15ந் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பயணம் செய்யவுள்ளனர். 


அப்போது கிரேட்வால் மோட்டார்ஸ், ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி நிறுவனங்களை பார்வையிடும் அவர்கள், தமிழகத்தில் அந்நிறுவனங்கள் தொழில் தொடங்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

திமுக உட்பட 10க்கு மேற்பட்டோர் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.


உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது. தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அளவில் பெரியதாக இருக்கிறது வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்! பொதுமக்கள் வாங்கத் தயக்கம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதேபோல, தஞ்சாவூரிலும் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 200 என விற்றது. வெங்காயப் பற்றாக்குறையாலும், விலை அதிகரிப்பாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. எகிப்தில் இருந்து வந்த வெங்காயம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூருக்கு எகிப்து நாட்டு வெங்காயம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
தஞ்சாவூருக்கு எகிப்து நாட்டு வெங்காயம் செவ்வாய்க்கிழமை வந்தாலும், பொதுமக்கள் வாங்குவதற்குத் தயங்கினா்.
தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் வெங்காய மண்டி நடத்தி வரும் எஸ்.கே. சிதம்பரத்துக்கு 2 டன்கள் வெங்காயம் வந்தது. இந்த வெங்காயம் பீட்ரூட் போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், அதை வாங்குவதற்குப் பொதுமக்கள் தயங்குகின்றனா். ஆனால், உணவகம் நடத்தி வருபவா்கள் வாங்கிச் செல்வதால், பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.

Monday, December 2, 2019

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இருநாட்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்று மற்றும் மேகக்கூட்டங்கள் குவிந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மயிலாடுதுறையில் 14 சென்டி மீட்டரும், புதுக்கோட்டை, குடவாசல் ஆகிய பகுதிகளில் 13 சென்டி மீட்டரும், அணைக்காரன்சத்திரம் காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்...?


வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ. 34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.85 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை விபரங்கள்:

பொதுப்பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

வேட்பாளர்கள் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6-ல் ஒருபங்கு வாக்குகளை பெற்றிருந்தால், அவர்களின் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். உதாரணமாக ஒரு ஊராட்சி வார்டில் 60 வாக்குகள் பதிவானது என்று எடுத்துக்கொண்டால், 10 மற்றும் அதற்கு மேல் வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெற தகுதியானவர்கள் ஆவர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்

2019ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்துகொள்வது மிகவும் எளிமையாக பட்டுள்ளது மேலும் இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை என்னை மட்டுமே வைத்து நீங்கள் வாக்களிக்கப் போகும் அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்


இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த இடத்தில் வாக்களிப்பீர் கள், நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத்து எண், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கும் வரிசை எண், உங்கள் பெயர் உங்கள் தந்தை பெயர் உங்கள் தெரு நீங்கள் வாக்களிக்கும் இடம் அனைத்தும் இதில் வரிசையாக பார்த்துக்கொள்ளலாம், மேலும் இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தகவல்களையும் நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13 ஆம் தேதி வரை வேட்புமனு பெறப்படும் என தெரிவித்த அவர், 16 ஆம் தேதி வேட்புமனு மீதான மறுபரிசீலனை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த தேதியில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 28, 2019

28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் குஷ்பு

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 
மேலும், அரசியலிலும் சில காலம் பயணித்தார் அம்மணி. ஆனால், அரசியலில் செல்ஃப் எடுக்காத காரணத்தினால் மீண்டும் சினிமாவிற்கே திரும்பியுள்ளார்.  தொலைகாட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பல ஆண்டு காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு இப்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். 

ஆம், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகை குஷ்பு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், உறுதி செய்யப்பட்டதும் அதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. நடிகைகுஷ்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு, 28 வருடங்கள் கழித்து ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை

 "சிறையில் இது எனக்கு 100வது நாள், அமலாக்கத்துறை இதுவரை என்னிடம் விசாரணை நடத்தியதில்லை, எந்த ஒரு சாட்சியையும் நான் எதிர்கொள்ளவில்லை"

- ப.சிதம்பரம் கூறியதாக கபில் சிபல் வெளியிட்ட தகவல்

பதவி ஏற்பு விழா ஸ்டாலினுக்கு அழைப்பு

ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

தெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

கர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

மகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ

நெல்லைக்காரனுங்களுக்கு கொழுப்ப பார்த்தியாலே...ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ

Jharkhand to vote in five phases from November 30, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்


ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. 
இதன் முடிவுகள் விவரம்: 
  1. பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றுவது கடினம். 
  2. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 முதல் 28 இடங்கள் கிடைக்கும்.
  3. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 10 இடங்கள் கிடைக்கும்.
  4. ஏஜேஎஸ்யூ கட்சிக்கு 4 முதல் 10 தொகுதிகள் கிடைக்கும் என்பதால் இம்முறையும் ஏஜேஎஸ்யூ தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். 

இதர கட்சிகள் 3 முதல் 9 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.


36 ஆண்டுகள் தனது நடிப்புத் திறமையால் வில்லனாக கோலொச்சியவர்..


சென்னை: தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகள் தனது நடிப்பு திறமையால் கோலொச்சிய நடிகர் பாலா சிங்கின் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் பிறந்தார். பள்ளி நாட்களிலேயே நடிப்பு மீது தீராத காதல் கொண்ட பாலா சிங், நடிப்புக்கான எந்த மேடை கிடைத்தாலும் அதனை அழகாக பயன்படுத்தி வந்துள்ளார்.

கல்லூரி காலத்திலும் மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டார் பாலா சிங். அப்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிப்பு மீது கொண்ட காதலால் கல்லூரி காலத்திலேயே சென்னை தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து முறையாக நடிப்பு பயின்றார்.
  • மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர், மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மலையாளத்தில் முதல் படமான மலை முகலிலே தெய்வம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிட்டின.
  • தமிழில் நடிகர் நாசரின் அறிமுகம் கிடைக்க 1995ஆம் ஆண்டு அவர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படத்தில் நடித்தார் பாலா சிங். அந்த படத்தில் அவரது நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் கவனத்தை பெற்றார் பாலா சிங். இதன் பலனாக இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமல்சஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்த பாலா சிங், மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் நடித்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலா சிங் பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார்.

குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார் பாலா சிங். கடைசியாக நடிகர் ஆர்யா நடிப்பில் வெளி வந்த மகாமுனி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி படம்.

சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார் பாலா சிங். சூலம், ருத்ரவீணை, நல்ல நேரம், ஆதிரா ஆகிய நான்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

தீவிர சிகிச்சை :

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. பாலா சிங்கின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான பாலா சிங்கின் மரணம் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமாகிடிச்சி.. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்கு!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் நல்ல மழை என்பதையே தமிழகம் இந்த ஆண்டு பார்க்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலும் வெளிநாடு பக்கம் சென்றுவிட்டது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான புயல் மேற்கு வங்கம் பக்கமாக திரும்பிவிட்டது.

இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட நாட்களாக நல்ல மழையில்லை. அவ்வப்போது தமிழகத்தின் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது.