ப்ரியாமணி இப்போது இரண்டாம் கட்டத்தில் இருக்கிறார். அவரை ப்ருத்விராஜா, ஜெகபதிபாபு என நான்கைந்து ஹீரோக்களுடன் இணைத்து செய்திகள் வந்துவிட்டன. அவற்றில், ஜெகபதி பாபுவுடனான காதலை மட்டும் மறுத்து விளக்கம் அளித்து வருகிறார் ப்ரியாமணி.
தொடர்ந்து இருவரும் நான்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். விரைவில் இருவருக்கும் திருமணம் என்றும் கூறப்படுவது பற்றி ப்ரியாமணி கூறுகையில், "எனக்கு திருமணம் என்றால் அதை பகிரங்கமாக சொல்வேன். நான் எதற்காக பயப்பட வேண்டும். ஆனால் உண்மையில் எனக்கு யார்மீதும் இன்னும் காதல் வரவில்லை. நெருங்கிய நட்பையெல்லாம் காதல் என்று எழுதுவதற்கு நானா பொறுப்பு. காதல் வந்தாலும் அது கல்யாணத்தில் முடிந்தாலும், நிச்சயம் அனைவருக்கும் சொல்வேன்!" என்றார்.
0 comments:
Post a Comment