சமீபத்தில் அஜித்தும் விஜய்யும் பின்னி மில் செட்டில் சந்தித்துக் கொண்டதாக செய்தி வெளியானதல்லவா… இந்த சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதுதான் இதில் ஹைலைட்.
இந்த சந்திப்பின்போது தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் திட்டங்கள் குறித்துப் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளின்போது நடந்ததை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்தும் கசிய விட்டுள்ளனர்.
விஜய்யின் காவலன் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் அஜீத் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவர்களுடன் படப்பிடிப்புக் குழுவினரும் விருந்தில் பங்கேற்றனர்
0 comments:
Post a Comment