ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தவர்கள் நடிகை சினேகாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அரங்கேறியது வேறு எங்குமல்ல… போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப் கருத்தரங்கம் ஒன்றில்தான்!
ரோட்டரி சங்கத்தின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நடிகை சினேகா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது போலியோவை ஒழிக்க என்னால் ஆன உதவியை செய்வேன் என்று கூறிய சினேகா, தன் பங்குக்கு ரூ. 15 ஆயிரத்தை கொடுத்தார்.
அதன் பிறகு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலரும் போலியோ ஒழிப்பு நிதியில் தங்கள் பங்குக்கு ஐநூறு ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வழங்கினார்கள்.
பின்னர் ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமான நன்கொடை வழங்கியவர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்பட்டு, சினேகாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
5 ஆயிரத்திற்கு குறைவாக நன்கொடை வழங்கியவர்களுக்கு சினேகாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது
0 comments:
Post a Comment