சாமியார் நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவத்திற்கு பிறகு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்த நடிகை ரஞ்சிதா, இப்போது தலை காட்டத் துவங்கியுள்ளார். சமீபத்தில் சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்தோடு கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்றார். மேலும் சிடியில் இருப்பது தான் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் ரஞ்சிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கு எதிராக ஒரு பெரும் சதி நடைபெற்று வருவதாகவும், சிடியை வெளியிட்ட லெனின் தனி ஆள் இல்லை என்றும், அவருக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டமே இருப்பதாகவும் கூறியுள்ளார். அது யார் என்று கேட்டதற்கு, அவர்கள் பெயரை சொல்லலாம், ஆனால் கொஞ்ச காலம் நான் உயிரோடு இருக்க வேண்டும், என்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு முழுபாதுகாப்பு தருவதாக இருந்தால் அவர்கள் பெயரை நான் சொல்லுகிறேன். சும்மா இரண்டு, மூனு நாளைக்கு நாலு, போலீசை பாதுகாப்பு நிப்பாட்டி பின்னர் அவர்கள் சென்றுவிட்டால், அப்புறம் நான் நடுரோட்டில் தான் நிக்கனும்.
ஆனா ஒண்ணு மட்டும் சொல்றேன். சிலப்பதிகாரம், மகாபாரதம் என இரண்டு காவியங்களிலும், கெட்டவர்கள் அழிந்தது பெண்ணாலே. கண்ணகி, திரெளபதி ஆகியோர்களின் சாபத்தால் கெட்டவர்கள் அழிந்துபோனார்கள். அதுபோல என்னுடைய வயிற்றெரிச்சல் சும்மா விடாது. நான் வயிர் எரிஞ்சு சொல்றேன், என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அனைவரும் சீக்கிரத்தில் அழித்து போய்விடுவார்கள். அவரவர் பண்ண பாவம் அவர்களை நிச்சயம் அழிக்கும்.
0 comments:
Post a Comment