பையா படம் வெளியான சமயம் என்பதாலும் அதன் பப்ளிசிட்டிக்கு இந்த கிசு கிசு 'ரொம்ப்ப்ப' உபயோகமாக இருந்ததாலும் சம்பந்தப்பட்ட எல்லோருமே மகிழ்ச்சியுடன் அந்த கிசுகிசுவை அனுமதித்தனர்.
இப்போது தமன்னாவுக்கு இந்த கிசுகிசுக்களிலிருந்து கட்டாய ஓய்வு கொடுத்துவிட்டனர். 'நான் மகான் அல்ல' என்ற படம் வெளியாகியுள்ளதல்லவா... இந்தப் படத்தில் நடித்த கார்த்தியும் காஜல்அகர்வாலும் காதலிப்பதாகசெய்திகள் பரப்பப்படுகின்றன.
நான் மகான் அல்ல படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் பத்திக்கிச்சு' என படக்குழுவைச் சேர்ந்தவர்களே திட்டமிட்டு கிசுகிசு பரப்புகிறார்களாம்.
இந்த ரெடிமேட் கிசுகிசுவுக்கு காஜல் அகர்வாலை விட்டு விளக்கம் வேறு கூற வைத்திருப்பதுதான் வேடிக்கை (அதிலும் புதிதாக ஒன்றுமில்லை.. வழக்கம்போல நாங்கள் நண்பர்கள் என்ற ரீதியில்தான்...):
"கார்த்தி நட்பாக பழகக் கூடியவர். படப்பிடிப்பில் நாங்கள் ஜாலியாக பேசிக்கொள்வோம். சீன்களில் எப்படி நடிக்க வேண்டும் என்றும் கருத்து பரிமாறிக்கொள்வோம்.
இதை வைத்து எங்களுக்குள் காதல் என்று கதை கட்டியுள்ளனர். நாங்கள் நல்ல நெருக்கமான நண்பர்கள்.
தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்த வருகிறேன். இந்திப் படங்களில் நடிக்க அவசரம் காட்டமாட்டேன். கதைகளில் ரொம்ப கவனம் செலுத்துகிறேன். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்.
தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன். தெலுங்கில் 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்..."
விளம்பரத்துக்கு விளம்பரமுமாச்சு... பரபரப்பாக இருப்பதாகக் காட்டி வாய்ப்பு தேடிக் கொண்டதுமாச்சு!
0 comments:
Post a Comment