ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா.


விஜ‌ய்யின் ஆறு படங்கள் அடுத்தடுத்து சுமார் மதிப்பெண் வாங்கியதும், சூர்யாவின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதும்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


வேலாயுதம் படத்துக்கு விஜய் 13 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மாற்றான் படத்துக்கு சூர்யாவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பதினைந்து கோடிகளாம். படம் அறுபது கோடிக்கு மேல் விலை போகும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
விஜய்யின் வேலாயுதமும், நண்பனும் வெற்றி பெற்றால் சூர்யாவை விஜய் எளிதாக முந்திவிடுவார் என்பதும் முக்கியமானது.