வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, June 24, 2011

பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்


பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து அமெரிக்க படையினர் மீட்டு சென்ற செல்போன்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. 


அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன், அவரது உதவியாளர்கள் இருவர் கடந்த மே மாதம் 2ம் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். பாகிஸ்தானில் உளவுத்துறை (ஐ.எஸ்.ஐ) உதவியுடன் செயல்பட்டு வந்த ஹர்கத்அல்முஜாகிதீன் என்ற அமைப்பினருடன் பின்லேடன் உதவியாளர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். 
பின்லேடன் பாகிஸ்தானில் இருந்து செயல்பட இந்த அமைப்பினர்
உதவியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இது குறித்த தீவிர விசாரணையில் அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளனர்

0 comments:

Post a Comment