திமுகவின் எதிரி என்ற கிளீன் இமேஜ் இருந்தாலும் உடன்பிறப்புகளின் ஆதரவு அரசியலில் இறங்கும் போது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது விஜய். பிறகென்ன.. வரவிருக்கிற வேலாயுதத்தில் உடன்பிறப்பையும் ஒருவரிசேர்த்திருக்கிறார்.
காவலன் படத்தில் எப்படி அரசியல் துளிகூட இல்லையோ அதற்கு அப்படியே உல்டாவாக வேலாயுதத்தில் அரசியல் நெடியும், வெடியும் அதிகம். அதிலும் சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது பாடல் வரிகளில் அரசியல் களைகட்டுகிறது.
விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கும் இந்தப் பாடலில் ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன்பிறப்பே என்று அதிமுக, திமுக என இரண்டு தொண்டர்களுக்குமே தூண்டில் போடுகிறார் விஜய். திமுக தொண்டனை பகைத்து கலெக்சனில் கல் எறிவானேன் என்றும் விஜய் நினைத்திருக்கலாம். வேலாயுதம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம்.
0 comments:
Post a Comment