இந்தி பட இசை அமைப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயில் தர்பார் சமீபத்தில் நாக்பூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் கூறியதாவது:-
2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.
உண்மையிலேயே ஏ.ஆர்.ரகுமான் திறமை உள்ளவர் என்றால் “ரோஜா” அல்லது “பம்பாய்” படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியது தானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும்.
இவ்வாறு இஸ்மாயில் தர்பார் கூறினார்.
அவரிடம் நிருபர்கள் ஏ.ஆர்.ரகுமான் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? எதை வைத்து இந்த குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு இஸ்மாயில் தர்பாரால் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்து இஸ்மாயிலுக்கு பல்வேறு துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் மீது தேவை இல்லாமல் புழுதி வாரி தூற்றக்கூடாது என்று இந்திப்பட உலகத்தினர் கூறியுள்ளனர்.
இந்தியர்களுக்கு ஆஸ்கார் விருது மூலம் பெருமை தேடி தந்தவர் ரகுமான். அவரை பற்றி இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று மற்றொரு இசை அமைப்பாளர் லலித் பண்டிட் கூறினார்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்கப்பட்டது. உடனடியாக அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், ஆஸ்கார் விருதுகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 3 ஆயிரம் மக்களால் விருதுகள் தேர்வு நடக்கிறது. எப்படி பணம் கொடுத்து வாங்க முடியும் என்றார்.
ரோஜா பம்பாய் இரண்டும் பிராந்திய மொழிப்படங்க
ReplyDeleteஆங்கிலப்படங்களுக்கு மட்டும்தாங்க ஆஸ்கார் விருது தருவாங்க... ஹாலிவுட் படத்தில் இசைக்கு வாங்கியது சாதனை...
காசு கொடுத்து இஸ்மாயில் தர்பார் கூட ஒண்ணு வாங்க வேண்டியதுதானே..
ரோஜா பம்பாய் படங்களுக்கு காசு கொடுத்தாலும் கொடுக்கமாட்டார்கள். அதுசரி அப்படியானால் 127 ஹவர்ஸ் படத்துக்கு விருது வாங்க ஏ ஆர் ரகுமானிடம் காசு இல்லையா?
ReplyDelete