வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, June 17, 2011

என்னை வெச்சி காமெடி பண்றாங்களே…?


என்னை வெச்சி காமெடி பண்றாங்களே…? டி.ஆர். வருத்தம்!!



சினிமாவில் என்னை காட்டி காமெடி பண்றாங்க என்று நடிகர் டி.ராஜேந்தர் வருந்தியுள்ளார். புதிதாக உருவாகியிருக்கும் பிள்ளையார் தெரு கடைசி வீடு என்ற படத்தில் நாயகன் ஜித்தன் ரமேஷ், டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். அதுவும் வீராச்சாமி படத்தினை விரும்பி பார்க்கும் ஹீரோவாக நடித்திருக்கிறார் ர‌மேஷ்.
டி.ஆரின் வீராச்சாமி போஸ்டர் முன்பு, டி,ஆரைப் போலவே வேஷ்டியை மடித்து கட்டி நின்று போஸ் கொடுப்பது போன்ற ஸ்டில்கள் வெளியானதால், படத்தில் டி.ஆரை ஜித்தன் ரமேஷ் கிண்டல் செய்கிறார் என்று செய்தி வெளியானது.
இதனை இப்‌போது மறுத்திருக்கிறார் ரமேஷ். நான் எப்பவுமே டி.ராஜேந்தர் மேல மரியாதை வச்சுருக்கிற ஆள். நான் அப்படி அவரை கிண்டலெல்லாம் பண்ண மாட்டேன், என்று கூறும் ரமேஷ், உடல் மண்ணுக்கு; உயிர் டி.ஆர்-க்கு என்று வசனமெல்லாம் ‌பேசி டி.ஆரின் புகழ் பாடியிருக்கிறாராம். படத்தின் டைரக்டர் திருமலை கிஷோர் கூறுகையில், இந்த படத்தில் ஜித்தன் ரமேஷை ராஜேந்தர் ரசிகராக நடிக்க வைக்க நினைச்சதுமே நான் அவரை நேரில் பார்த்து அனுமதி வாங்கிடனும்னு நினைச்சேன். அதுக்காக அவரை பார்க்க போயிருந்தேன். முதல்ல தயங்கினார். வேண்டாம்… இப்படிதான் பல பேர் என்னை ஒரு காமெடியன் மாதிரி சினிமாவில் காட்டுறாங்க என்று வருந்தினார். ஒரு காலத்தில் அவருடைய படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவின் கலெக்ஷன் மையமாகவும் டிரெண்ட் செட்டராவும் இருந்திருக்கு. அவருடைய பாடல்களை கேட்டுதான் சினிமா மீதே எனக்கு ஆர்வம் வந்திச்சு. படிக்கிற காலத்தில் அவருடைய படங்களை பார்க்க பல மணி நேரம் க்யூவில் நின்னுருக்கேன். இதையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொல்லி உங்களை எந்த இடத்திலும் கிண்டல் செய்யுற மாதிரி எடுக்க மாட்டோம்னு சொன்னேன். அதற்கு பிறகு அவர் எங்களை நம்பினார். அதன்பிறகே டி.ஆர். சார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்தோம், என்றார்.
படத்தின் சூட்டிங் முடிந்ததும் சிம்புவை வர‌வழைத்து படத்தை போட்டு காட்டியிருக்கிறார் டைரக்டர் திருமலை கி‌ஷோர். ரொம்ப பிரமாதமா இருக்கு என்று சிம்புவும் மனதார பாராட்டினாராம்.
                                                                                    posted by....ikm

0 comments:

Post a Comment