நான் கல்வியமைச்சரானால்.....!!
+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!) 1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது? (அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம் 2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும் 2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது? 2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான, மூன்றெழுத்துத் திரைப்படம் எது? (i) மெட்டி (ii) சட்டி (iii) பெட்டி (iv) குட்டி 3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது? (அ) புல் வெட்டுவது (ஆ) பஞ்சர் ஒட்டுவது (இ) ஊதுபத்தி விற்பது (ஈ) கவிதை எழுதுவது 4. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது? (அ) இன்பத்துப்பால் (ஆ) மசாலா பால் (இ) ஆவின் பால் 5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்) 6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்) 7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை? 8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்? (அ) வட இந்தியர்கள் (ஆ) பஜ்ஜி இந்தியர்கள் (இ) போண்டா இந்தியர்கள் 9. எது பல்குத்த உதவும்? (அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு 10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது? (அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை 11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்? 12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன? 13. இந்தியாவின் தேசியப்பறவை எது? (அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை 14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா? முடியாதா? (அ) முடியும் (ஆ) முடியாது 15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது? 16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்? (அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு 17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது? (அ) துவரங்குறிச்சி (ஆ) ஆழ்வார்குறிச்சி (இ) கல்லிடைக்குறிச்சி 18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால், மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்? 19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன? 20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்) |
இதை தேர்தல் அறிக்கையில சொன்னீங்கனா
ReplyDeleteநீங்க கல்வியமைச்சராவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கேள்விகள் எல்லாம் சூப்பர். நாடு வெளங்கிடும்.. சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கு ஆறாம் வகுப்பு எடுத்த ஆசிரியர் வகுப்பில் கேட்ட கேள்வி இது.
ReplyDeleteதமிழகத்தின் ஆளுநர் யார்?
1. சென்னாரெட்டி
2. கந்தன்
3. கடம்பன்.
இதை நினைவு படுத்தி விட்டீர்கள்.
நல்லவேளை! தேர்தலுக்கு முன்னாடி அம்மா/அய்யா ரெண்டு பெரும் பாக்கல. இல்லன்னா என்ன மாதிரியே அவங்களும் காப்பி அடிச்சுருப்பாங்க.
ReplyDelete