ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு. அனுபவப்பூர்வமாக இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு.
தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெரிந்துவிடும். திமுக-வே வந்தால் பிரச்சனையில்லை. மாறாக அதிமுக வந்தால்…?
இந்தக் கோணத்திலும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஜெயலலிதாவை விமர்சிக்கவே இல்லை. அதற்கு இப்போது விளக்கம் தந்திருக்கிறார். திமுக அரசின் சாதனைகளை சொன்னாலே போதும் என மு.க.ஸ்டாலின் கூறினார், அதனால்தான் ஜெயலலிதா பற்றி எதுவும் கூறவில்லை என விளக்கம் தந்திருக்கிறார். அப்போ விஜயகாந்த்?
அவரோட படத்தில் அடுத்த முதல்வர்னு பேசச் சொன்னாங்க, ஆளைவிட்டு அடிச்சார் என சொந்தக் காரணங்களை நிரப்பி எஸ்கேப்பாகப் பார்க்கிறார்.
இப்போதே இப்படி குழைபவர் அதிமுக வந்தால் காவடி எடுத்தாலும் எடுப்பார்.
0 comments:
Post a Comment