ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.
தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத் தூதராக உள்ளார் தீபிகா.
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தீபிகாவும் சித்தார்த்தும் கைகோர்த்தபடி ஜோடியாக சுற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் வழக்கம்போல இது வெறும் நட்பு மட்டுமே என்று கூறி வந்தார் தீபிகா.
இந்த நிலையில், பெங்களூர் அணியும் கொல்கத்தா அணியும் சமீபத்தில் மோதிய ஐபிஎல் போட்டியைக் காண விஜய் மல்லையாவும் வந்திருந்தார்.
அவரது மகன் சித்தார்த்தும் தீபிகாவும் இன்னொரு பகுதியில் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் பெங்களூர் அணி வென்றதும், இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டனர். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் இருப்பதையோ, அருகில் விஜய் மல்லையா இருப்பதையோ இருவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
ரொம்ப ‘ரொமான்டிக்கான நட்பு’ போலிருக்கே!
0 comments:
Post a Comment