வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, April 16, 2011

இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம்

1. எலெக்‌ஷன்ல  தோத்த  பிறகும்  கூட  தலைவர்  எதுக்காக  மக்கள்ட்ட  நிதி  திரட்டறாரு?

டெபாசிட்  கூட  கிடைக்கலை.  என்ன  பண்ணுவாரு?  இழந்த  பணத்தை  எப்படி  மீட்டெடுப்பது?

----------------------------

2. குடிமக்களின்  நன்மதிப்பைப்  பெற  வேண்டும்ங்கற  எண்ணம்  தலைவரோட  தேர்தல்  அறிக்கைல  தெரியுது.

எப்படி  சொல்றே?

நடமாடும்  டாஸ்மாக்  கடை  அமைத்து  வீட்டுக்கு  வீடு  சரக்கு  சப்ளை  டோர்  டெலிவரி  செய்யப்படும்கறாரே?

-----------------------------

3. அவர்  ஒரு  பரம்பரைக்  குடிகாரர்-னு  எப்படி  சொல்றே?

இனிமே  நான்  சரக்கடிக்க  மாட்டேன்...  இது  குவாட்டர்  பாட்டில்  மேல  சத்தியம்  அப்டீன்னாரே?


--------------------------

4. நாங்க  பொண்ணு பார்க்க  வந்தப்ப  நீ  ஒரு  ஸ்வீட்  வெச்சியே...  அது  ரொம்ப  கேவலமா  இருந்துச்சு...

அதை  ஏன்  அப்பவே  சொல்ல்லை?

அம்மா  சொன்னாங்க...  பொண்ணே  ரொம்ப  கேவலமாத்தான்  இருக்கு;  ஸ்வீட்  கேவலமா  இருந்தா  என்ன?-னு...

------------------------------

5. சேலை  இல்லாத  பெண்களுக்கு  லேப்டாப்  ஃப்ரீனு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

வேலை இல்லாத  ஆண்களுக்கு  மட்டும்தான்  வேலை  வாய்ப்பா?-னு  யாரும்  கேள்வி  கேட்டுடக்  கூடாதே?

---------------------------------

6. தலைவர்  எப்பவும்  மேடைல  டபுள்  மீனிங்லதான்  பேசுவாராம்.

அதுக்காக  டபுள்  டிஜிட்ல  சீட்  வேணும்னு  கூட்டணி  கட்சி  கிட்டே  நிர்ப்பந்தம்  விதிச்சா  எப்படி?

------------------------------------



7. நாட்டில்  இருக்கிற  எல்லா  கள்ளர்  இன  மக்களையும்  தலைவர்  தொகுதிக்கு  கூட்டிட்டு  வந்து  இறக்கிட்டாரே! ஏன்?

கள்ள  ஓட்டுக்கள்  போடனும்னா  கள்ளர்கள்  போடற  ஓட்டு-னு  நினச்சுட்டார்.

------------------------------------

8. தலைவருக்கு  ரெண்டே  ரெண்டு  சின்ன  வீடுதான்  இருக்காம்.  அதுலயும்  ஒரு  சின்ன  வீட்டுக்கு  மட்டும்தான் போய்ட்டு  இருக்காராம்.

ஓஹோ...  ஒன்றுக்கு  மேல்  இப்போது  வேண்டாம்...  இரண்டுக்கும்  மேல்  எப்போதும்  வேண்டாம்-னு  சொல்றாங்களே... அதை  ஃபாலோ  பண்றார்  போல...

---------------------------------

9. தலைவரோட  தேர்தல்  அறிக்கை  நம்பற  மாதிரி  இல்லையாமே?  ஏன்?

வீட்டுக்கு  வீடு  ஜிப்சி  ஜீப்  இலவசம்ங்கறாரே?

-------------------------------



10.  தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  கம்மின்னு  எப்படி  சொல்றே?

பவர்  ஸ்டாரின்  லத்திகா  படம்  லத்திகா  சரணின்  சுயசரிதையா?  அப்டினு  கேட்கறார்.

1 comment: